UAE Tamil Web

ஷார்ஜா: குளிக்க வைக்கும் போது தாயின் அலட்சியத்தால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்.!

bath

அமீரகத்தில் வீட்டிலிருந்த குளியல் தொட்டியில் மூழ்கி குழந்தை ஒன்று பரிதாபமாக இறந்துவிட்டது. இந்த சம்பவம் ஷார்ஜாவில் இரு நாட்களுக்கு முன் நடந்ததாக கல்ஃப் நியூசிற்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

செவ்வாய் பிற்பகல் 2.35 மணியளவில் அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு வயதான குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குளியல் தொட்டி நீரில் மூழ்கி இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், தாய் குழந்தையை குளிப்பாட்ட கூட்டி சென்றுள்ளார். பாத்டப்பில் முழுவதுமாக நீர் நிரம்பியிருந்த வேளையில் குழந்தையை அதில் சிறிது நேரம் தனியாக விட்டு சென்றுள்ளார். அப்போது தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கு, பொது வழக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

பெற்றோரின் அலட்சியம் காரணமாகவே குழந்தையின் உயிர் ஆபத்தில் சிக்கியதாக குற்றம் சாட்டிய அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் குழந்தைகளை அதிக விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும், மின் சாதனங்கள் மற்றும் தண்ணீர் பக்கம் அவரகள் சென்று விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.