UAE Tamil Web

ஷார்ஜா: இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்..!

Corona injection

ஷார்ஜா: உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என நகராட்சி தெரிவித்துள்ளது.

- Advertisment -

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் இந்த நடைமுறையில் இருந்து விலக்குப் பெறலாம்.

பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அல்லது நெகட்டிவ் கொரோனா சான்றிதழை வைத்திருப்பவர்கள் என உணவகங்களில் ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட வேண்டும்.

உணவகங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர்.

உணவகங்களில் டேபிள்கள் இரண்டு மீட்டர் இடைவெளியில் போடப்பட்டிருக்க வேண்டும். அதேபோல ஒரு டேபிளில் நான்கு பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படவேண்டும்.