UAE Tamil Web

ஷார்ஜாவில் ஏப்ரல் 10 ஆம் தேதிவரையில் இலவச பார்க்கிங் – எங்கு? யாரெல்லாம் உபயோகிக்கலாம்..?

Parking

ஷார்ஜாவில் சமீபத்தில் பாரம்பரிய திருவிழா துவங்கியது. ஏப்ரல் 10 வரையிலும் நீடிக்கும் இந்தத் திருவிழாவில் 29 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த திருவிழாவிற்கு வருபவர்களுக்கென 230 பார்க்கிங் இடங்களை ஒதுக்கியுள்ளது ஷார்ஜா அரசு.

- Advertisment -

அல் மெரெய்ஜா (Al Mareija) மற்றும் அல் ஷோயோக் (Al Shoyoukh) ஆகிய இடங்களில் மொத்தம் 233 பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வாகனங்களை பார்க் செய்பவர்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஷார்ஜா பாரம்பரிய நிறுவனம் (Sharjah Institute for Heritage) நடத்தும் இந்த நிகழ்ச்சியின் மையக் கருவாக பாரம்பரியம் எங்களை ஒன்றிணைக்கிறது எனப் பொருள்படும் “Cultural heritage gathers us” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 29 நாடுகள் பங்கேற்கும் இத்திருவிழாவில் இந்த வருடம் மாண்டிநீக்ரோ குடியரசு கவுரவ விருந்தினராகவும், கஜகஸ்தான் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் நாடுகள்: பெலாரஸ், ​​மாசிடோனியா, பாஷ்கார்டோஸ்தான், தஜிகிஸ்தான், பல்கேரியா, சவுதி அரேபியா, ஓமான், குவைத், பஹ்ரைன், மாலத்தீவுகள், யேமன், எகிப்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சூடான், லெபனான், மொராக்கோ, பாலஸ்தீனம், அல்ஜீரியா, சிரியா, கென்யா, துனிசியா, நெதர்லாந்து, மொரீட்டியா , ஈராக் மற்றும் இந்தியா.