UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியா சென்ற விமானம் அவசர அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கம் – காரணம் என்ன?

indigo

இன்று, ஷார்ஜாவிலிருந்து லக்னோவிற்குப் பயணித்த இண்டிகோ விமானம், பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரம் கருதி பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,” ஷார்ஜாவில் இருந்து லக்னோவிற்குப் பயணித்த 6E 1412 இண்டிகோ விமானம் மருத்துவ அவசரம் கருதி கராச்சியில் தரையிறக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக பயணி உயிரிழந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக் குழு தெரிவித்திருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்துபோன பயணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

indigo
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap