UAE Tamil Web

300 திர்ஹம்சில் அமீரகம் – இந்தியா இடையேயான விமான டிக்கெட் – ஏர் அரேபியாவின் அசத்தல் ஆஃபர்..!

Air-Arabia_

ஷார்ஜாவை மையமாகக்கொண்டு இயங்கும் விமான நிறுவனமான ஏர் அரேபியா அமீரகம் – இந்தியா இடையேயான ஒன் வே (one-way) விமான டிக்கெட்டை 300 திர்ஹம்ஸ் கட்டணத்தில் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

- Advertisment -

கொரோனாவிற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் அமீரகத்தின் தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பை ஏர் அரேபியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

சமீபத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இலவச மருத்துவ காப்பீட்டை இந்த விமான நிறுவனமே அளிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

இந்த மருத்துவ காப்பீட்டைப் பெற வேறெந்த கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை, முன்பதிவு செய்தால் போதும் என அந்நிறுவனம் பயணிகளிடம் தெரிவித்திருந்தது.

பயணத் தேதியில் இருந்து 31 நாட்கள் வரை இந்த காப்பீடு செல்லும். மேலும் மருத்துவ மற்றும் குவாரண்டைன் செலவுகளும் இதில் அடங்கும்.

இந்த சிறப்பு தள்ளுபடிக் கட்டணத்தில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் ஏர் அரேபியாவின் இணையதளத்தினைப் பார்வையிடலாம் அல்லது 06-5580000 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.