ஜனவரி 1, 2020 ஆம் தேதி முதல் அக்டோபர் 31, 2020 ஆம் தேதிவரையில் ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தினால் (SRTA) விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக SRTA தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடித் திட்டம் வரும் மார்ச் 1, 2021 ஆம் தேதிவரையில் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், வாகனவோட்டிகள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது அபராதங்களை செலுத்திடுமாறு போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
View this post on Instagram
கீழ்க்கண்ட வழிகளில் அபராதத் தொகையினை செலுத்தலாம்
போக்குவரத்து ஆணையத்தின் இணையதளம் மூலமாக.
அல் அஸ்ராவில் உள்ள போக்குவரத்து ஆணையத்தில் செலுத்தலாம்.
கோர் ஃபக்கான் மற்றும் கல்பாவில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகங்களிலும் செலுத்தலாம்.
இந்த தள்ளுபடித் திட்டம் குறித்து மேலும் தகவல் பெற விரும்புவர்கள் 600525252 என்ற எண்ணிற்கு எந்நேரத்திலும் அழைக்கலாம்.