UAE Tamil Web

ஷார்ஜா: இரண்டு அழகிய மசூதிகள் திறப்பு – 960 பேர் தொழுகை நடத்தலாம்..!

mosque

ஷார்ஜாவின் இஸ்லாமிய விவகாரத்துறை இரண்டு புதிய மசூதிகளை இன்று திறந்துள்ளது. அல் சகினா (Al Sakina) மற்றும் துலைஹா பின் குவைலித் (Tulayha Bin Khuwaylid) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த இரண்டு மசூதிகளிலும் மொத்தமாக 75 பெண்கள் உட்பட மொத்தம் 960 பேர் தொழுகை நடத்தலாம்.

அல் ரஹ்மானியா 4 ஆம் பகுதியில் அமைந்துள்ள அல் சகினா மசூதி 2,267.6 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இஸ்லாமிய கட்டிடக்கலையின் அடிப்படையில் இந்த மசூதியில் வட்ட மாடமும் 35.15 மீட்டர் உயரமுள்ள மினாரத்தும் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறைகள் மற்றும் ஒலு செய்யும் இடம் தவிர்த்து மசூதியின் இமாம் தங்குவதற்கும் அறை கட்டப்பட்டுள்ளது.

ஃபாலா பகுதியில் அமைந்துள்ள துலைஹா பின் குவைலித் மசூதியில் 60 பேர் வழிபாடு நடத்தலாம். 240 சதுர மீட்டரில் நவீன இஸ்லாமிய கட்டிடக்கலையின் சாட்சியாக இந்த மசூதி கட்டமைக்கப்பட்டுள்ளது. வட்ட மாடமும் 10.5 மீட்டர் உயரமுள்ள மினாரத்தும் இந்த மசூதியினை அழகாக்குகின்றன. கழிப்பறைகள் மற்றும் ஒலு செய்யும் இடம் தவிர்த்து மசூதியின் இமாம் தங்குவதற்கும் அறை கட்டப்பட்டுள்ளது.

mosque
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap