UAE Tamil Web

ஷார்ஜா: 7000 சதுர மீட்டரில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையை திறந்தது அரசு..!

Sharjah

ஷார்ஜாவில் கொரோனா நோயாளிகளுக்காக கட்டப்பட்ட முகமது பின் சயீத்  மருத்துவமனையை ஆட்சியாளரின் அலுவலக தலைமை அலுவலர் ஷேக் சலீம் பின் அப்துல் ரஹ்மான் அல் காசிமி நேற்று திறந்துவைத்தார்.

- Advertisment -

7000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்காக 48 படுக்கைகளும் மிதமானது முதல் மோசமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்காக 156 படுக்கைகளும் என மொத்தம் 204 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மருத்துவமனையில் 75 மருத்துவர்கள், 231 செவிலியர்கள், 44 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள்.

சுகாதார மற்றும் நோய்த்தடுப்புத்துறை அமைச்சகத்தினால் கொரோனா நோயாளிகளுக்காக வரும் வாரங்களில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட 7 கள மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதேபோல, அஜ்மானிலும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக கள மருத்துவமனை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.