உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி, ஷார்ஜாவின் அல் மஹாட்டா பகுதியில் கட்டப்பட்ட அல் பாரா மசூதியைத் (Al Bararah Mosque) திறந்த பின்னர் அங்கே தொழுகை நடத்தினார்.
இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த மசூதி 665 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இம்மசூதியில் அமைக்கப்பட்டுள்ள 7.5 மீட்டர் விட்டமுள்ள குவிமாடமும் 30 மீட்டர் உயரமுள்ள மினாரத்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
صاحب السمو الشيخ الدكتور سلطان بن محمد القاسمي عضو المجلس الأعلى حاكم الشارقة -حفظه الله- يفتتح مسجد البَرَرَة، الواقع في منطقة المحطة بمدينة الشارقة.
.
.
.#دائرة_الشؤون_الإسلامية #الشارقة #الإمارات #مساجد_الشارقة #مساجد_الإمارات #حاكم_الشارقة pic.twitter.com/RCFr8ENzf8— الشؤون الإسلامية – الشارقة (@Islamic_Affairs) March 29, 2021
ஒலு செய்வதற்கான இடம் மற்றும் கழிப்பறைகளும் அமைந்துள்ள இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 470 பேர் தொழுகை நடத்தலாம். பெண்கள் தொழுகை செய்ய 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று வாயில்களைக் கொண்டுள்ள இம்மசூதியில் பெண்களுக்கு மற்றும் இமாம்களுக்கு தலா ஒரு வாயில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் ஷார்ஜா ஆட்சியாளர் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.