UAE Tamil Web

மலையேற்றத்தின்போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர்: பலத்த காயத்துடன் துடித்தவரை ஹெலிகாப்டர் மூலமாக காவல்துறை மீட்ட வீடியோ..!

Sharjah

ஷார்ஜாவின் ம்லெய்ஹா மலைப்பகுதியில் இன்று காலை 9.50 மணிக்கு மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த 42 வயது ஆண் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.

- Advertisment -

இதன்காரணமாக அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. தலையிலும் மோசமாக காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருடன் பயணித்த அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.

தேசிய தேடுதல் மற்றும் மீட்பு மையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ம்லெய்ஹா காவல்நிலையம் மற்றும் ரோந்துத் துறையின் இயக்குனர் லெப்டினட் கர்னல் சலீம் சுல்தான் அல் கெட்பி (Salem Sultan Al Ketbi) இந்த மீட்புக் குழுவினை ஒருங்கிணைத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் இடம் துல்லியமாக தெரியாத காரணத்தினாலும், ஆம்புலன்ஸ் செல்லும் வழி மோசமாக இருந்ததாலும் ஹெலிகாப்டர், மீட்பு சேவைக்குப் பயன்படுத்தப்பட்டது.

மீட்கப்பட்ட நபர் அல் தைத் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணம் மேற்கொள்ளுமாறு அல் கெட்பி தெரிவித்தார்.

மலைப்பாங்கான பாதையைக் கருத்தில்கொண்டு எவ்விதமான சிக்கலான மீட்பு நடவடிக்கையையும் இந்த மீட்புக்குழு எடுக்கவல்லது என அல் கெட்பி தெரிவித்தார்.