UAE Tamil Web

பணிமாற்றம் பெற்ற அமைச்சருக்கு பிரியாவிடை கொடுத்த ஷேக் அப்துல்லா..!

Sheikh Abdulla

மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணிபுரிந்துவந்த டாக்டர்.அன்வர் கார்கேஷ் தற்போது அமீரக தலைவருக்கு ராஜாங்க ஆலோசகராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், அன்வர் கார்கேஷ் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்வர் கார்கேஷ் தனக்கு ஆசிரியர் போலவும், வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தில் அனைவருடன் நட்புடனும் பழகியவர் என ஷேக் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்துல்லா,” உங்களது பிரிவு எங்களை வருத்தம் கொள்ளச்செய்கிறது. நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தும் எனது பாதையினை ஒளிமிகுந்ததாக மாற்றுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sheikh Abdulla
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap