நேற்று Dubai Government Excellence Program என்னும் சாதனை புரிந்த துபாய் அரசுப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இதில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதளித்தனர்.
قبل 24 عاماً كانت انطلاقة برنامج دبي للتميز الحكومي على يد رائد التميز صاحب السمو الشيخ محمد بن راشد آل مكتوم … نبارك لكل الفائزين والمكرمين وندعم كل من يعمل بجد خدمة للوطن والمواطن والمقيم والزائر، فبجهودكم تواصل دبي وحكومتها مسيرتها نحو الريادة العالمية. pic.twitter.com/693suSRqbJ
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) November 18, 2021
இதுகுறித்து ஷேக் ஹம்தான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” 24 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோடியான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இந்த Dubai Government Excellence Program திட்டத்தைத் துவங்கிவைத்தார். விருதுபெற்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள். நாட்டிற்காக சேவை செய்யும் பணியாளர்கள், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது இந்த முயற்சிகளினால் துபாய் அரசு உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கி பெருமையுடன் நடைபோடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
