UAE Tamil Web

ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக்கொண்ட துபாய் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் – ஷேக் ஹம்தான் அறிவிப்பு..!

sheikh-hamdan,-dubai,-uae,-schools-reopen,-covid-19,-distance-learning,-work-from-home

ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் துபாய் அரசு பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அறிவித்திருக்கிறார்.

அதேபோல வீட்டில், ஆன்லைன் வகுப்பில் படிக்கும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேறு ஆள் இல்லையெனில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்களும் வீட்டிலிருந்தே பணியாற்றவும் இளவரசர் அனுமதியளித்திருக்கிறார்.

ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கும் குறைவான வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளின் தாயார்கள் அரசு இயந்திரம் சரியான முறையில் இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்ற இளவரசரின் அறிவிப்பிற்கு துபாய் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துவருகின்றனர்.

குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் காலத்திற்கு மட்டும் தாயார்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதிமுதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதையோட்டி இம்முடிவினை இளவரசர் அறிவித்திருக்கிறார்.


இதுகுறித்துப் பேசிய துபாய் அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் (DGHR) தலைமை இயக்குனரான அப்துல்லா அலி பின் சயீத் அல் ஃபலாசி (Abdullah Ali bin Zayed Al Falasi),” அரசு ஊழியர்களின் சமூக நிலை பற்றிய தனது அக்கறையை வெளிக்காட்டும் விதமாக அரசின் இம்முடிவு அமைந்துள்ளது. துபாய் அரசு ஊழியர்களின் மகிழ்ச்சியான மற்றும் நிலையான குடும்ப அமைப்பினை உறுதிப்படுத்தும் ஷேக் ஹம்தானின் சிந்தனையை பிரதிபலிக்கும் தீர்மானம் இது” என்றார்.