‘துபாய் ரன் 30X30 ‘ பங்கேற்பாளர்களுடன் இளவரசர் ஷேக் ஹம்தான்..!

Sheikh Hamdan cheers, motivates participants of Dubai Run 30X30

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC) 2019-ன் ஒரு பகுதியாக, முதல் முறையாக துபாயின் ஷேக் சயீத் சாலை (நவம்பர் 8) ஓடும் பாதையாக மாறியுள்ளது.

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் செயற்குழுத் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெள்ளிக்கிழமை இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம், ஷேக் சயீத் சாலையின் நடுவில் பங்கேற்பாளர்களுடன் இளவரசர் நிற்கும் புகைப்படம் ஆகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ‘துபாய் ரன் 30X30’ போட்டியில் கலந்துகொண்டவர்களை ஊக்குவிப்பதற்காக இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்.

14 வழிச்சாலையின் ஒரு பிரிவில் மக்கள் ஓட அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

Loading...