துபாயின் பொருளாதார மேம்பாடு குறித்து துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் துபாயின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசு புதிய முயற்சிகளை எடுத்துவருவதாகவும் எவ்வித சூழ்நிலையையும் துபாய் அரசு திறம்பட கையாளும் என ஹம்தான் தெரிவித்துள்ளார்.
தொழிலை வெற்றிகரமாக நடத்த, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்க மற்றும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த பல்வேறு நிலையான திட்டங்கள் மற்றும் திருத்தப்பட்ட கொள்கைகளை துபாய் அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக இளவரசர் தெரிவித்தார். மேலும் இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
