துபாய் எக்ஸோ 2020 அடுத்த மாதம் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதற்கான தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் சைக்கிள் ஓட்டியவாறு வலம் வந்தார். தொடர்ந்து அங்கு அவர் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். எக்ஸோ 2020க்காக உழைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள துபாய் இளவரசர் துபாயின் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
துபாய் இளவரசரின் புகைப்படத் தொகுப்பு..
