UAE Tamil Web

துபாய் இளவரசரை உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்த புதிதாகத் திறக்கப்பட்ட உணவகம் ; ஷாக் கொடுத்த இளவரசர்..!

fazza

பாரிசில் மிகவும் பிரபல ரெஸ்டாரண்டான காவியர் காஸ்பியா கடந்த வாரம் துபாயில் தனது கிளையைத் துவங்கியது. துபாய் DIFC யில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம், துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை ஒருமுறை ஹோட்டலுக்கு வருகை தரும்படியும் உணவருந்துமாறும் அன்புக் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் இன்று ஷேக் ஹம்தான் காவியர் காஸ்பியா உணவகத்திற்குச் சென்றிருக்கிறார். இதனால் ஷாக்கான உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இளவரசருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இளவரசரின் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றினையும் ரெஸ்டாரன்ட் நிர்வாகம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,” காவியர் காஸ்பியா துபாய் ரெஸ்டாரன்ட்டிற்கு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சிகொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

fazza
1 Share
Share via
Copy link