UAE Tamil Web

“இதுதான் நம்ம குதிரை” – தனது இரட்டைக் குழந்தைகளுக்கு துபாய் அரச குடும்பத்தின் குதிரையை அறிமுகம் செய்துவைத்த இளவரசர் ஹம்தான்..!

sheikh (2)

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சில் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது மூன்று மாத இரட்டைக் குழந்தைகளுடன் பிரிட்டனுக்குச் சென்றுள்ளார்.

அங்கு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் உருவாக்கப்பட்ட குடோல்பின் ஸ்டேபிள்-க்குச் சென்றார் இளவரசர்.

துபாய் ஆட்சியாளருக்கு குதிரைப் பந்தயம் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது நாம் அறிந்ததே. அவரால் உருவாக்கப்பட்ட இந்த குதிரை வளர்ப்பு மையத்தில் இருக்கும் அவர்களது முக்கிய குதிரைகளில் ஒன்றான அதயார் பந்தயம் அடிப்பதில் கில்லி.

பந்தயக் குதிரை வரலாற்றில் ஒரு மைல்கல்லான அதயாரை தனது குழந்தைகளுக்குக் காட்டியிருக்கிறார் துபாய் இளவரசர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போது வைரல் கண்டென்ட்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் இளவரசர்,” கல்வி மற்றும் பயிற்சிகள் இளம் வயதிலேயே ஆரம்பித்திட வேண்டும். ஷேக்கா மற்றும் ரஷீத் அதயாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதயார் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இங்க்லீஷ்  டெர்பி போட்டியில் முதலிடம் பிடித்தது நினைவிருக்கலாம்.

sheikh (2)
1 Share
Share via
Copy link