UAE Tamil Web

புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் உச்சியில் நின்று துபாய் இளவரசர் வெளியிட்ட வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்..!

SheikhHamdan

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீ’ஃபா மீதேறி விடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

- Advertisment -

வீடியோ வெளியான சில நிமிடங்களில் 100,000 முறை அது பார்க்கப்பட்டிருக்கிறது. தனது பதிவில் “828 மீட்டர் உற்சாகம்” என இளவரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் கட்டிடத்தின் உச்சியை அடைந்த ஷேக் ஹம்தான், கீழே புள்ளிகளாகத் தெரியும் கார்கள், மனிதர்கள் ஆகியோரையும் தலைக்கு மேலே ஒளிவீசிய நிலவையும் வீடியோவாக எடுத்துப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் வேர்ல்ட் எக்ஸ்போ 2020 ஐ நடத்துவதற்கான போட்டியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் விதமாக கடந்த 2013 ஆம் ஆண்டு புர்ஜ் கலீஃபா மீது ஏறி வீடியோ ஒன்றினை ஷேக் ஹம்தான் வெளியிட்டார்.

தலைகீழாக தொங்குவது, சுறா மீன்கள் மற்றும் யானையுடன் நீச்சலடிப்பது, முள்வேலி தடையிலிருந்து வெளியேறும் வழியில் ஊர்ந்து செல்வது, விமானத்திலிருந்து வெளியே குதித்து காற்றில் மிதப்பது போன்ற திகிலூட்டும் விஷயங்களை செய்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிடும் ஷேக் ஹம்தானை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.