UAE Tamil Web

தனது பேரக் குழந்தைகளை கைகளில் தாங்கும் துபாய் ஆட்சியாளர் – வைரலாகும் புகைப்படம்..!

JUN-MBR-twins

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் – ஷேக்கா ஷேக்கா பின்ட் சயீத் தம்பதிக்கு கடந்தமாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இரட்டை பேரக் குழந்தைகளை கையில் ஏந்திய புகைப்படம் ஒன்றினை ஷேக் ஹம்தான் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இறைவன் அவர்களை காக்கட்டும் (God save them) என்ற வரிகளுடன் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு 64,000 லைக்ஸ்களும் 14,000 கமெண்ட்களும் குவிந்துள்ளன. ஹம்தானை ட்விட்டரில் 16 மில்லியன் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான வில் ஸ்மித், ஷேக் ஹம்தானின் இரட்டைக் குழந்தைகளுக்கு சமீபத்தில் பரிசுகளை அனுப்பியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

JUN-MBR-twins
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap