பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், வானில் இருந்து துபாயின் அழகிய காட்சிகளை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அமீரகத்தில் ஒரு சிறந்த படைப்பாளியாகவும், கலைஞராகவும் திகழ்பவர். இவர் விமானத்தில் புர்ஜ் கலிஃபா, அட்லாண்டிஸ், தி பார்ம் ஆகிய இடங்களை விமானம் மூலம் கடப்பதற்கு முன்பு, இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களையும், கண்ணை கவரும் ஒளி விளக்கில் அங்குள்ள சாலைகளையும் அழகான வீடியோவாக படம்பிடித்துள்ளார். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர் “வரம்புகள் இல்லாத நகரம் துபாய்” என வர்ணித்துள்ளார்.
இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், ப்ரீலாண்ஸ் வேலைக்காக துபாய்க்கு வரும் திறமையானவர்களை ஊக்குவிக்க, டேலண்ட் பாஸ் விசாவை அண்மையில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Dubai, the city that knows no limits. Scenes from awakenfilm pic.twitter.com/MdgVGIUnmK
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) January 9, 2022