UAE Tamil Web

இறந்துபோன மகனுடைய உடலுறுப்புகளை தானமளித்து 3 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய தம்பதி – மனிதாபிமானத்தின் உச்சம் எனப் பாராட்டிய துபாய் இளவரசர்..!

sheikh-hamdan-expo-2020-dubai-site

துபாயில் வசித்துவரும் இந்திய தம்பதி ஒன்று தங்களது கடினமான சூழ்நிலையிலும் பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்ற மேன்மையான சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிறது.

விவன் விஜயன் என்னும் 2 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவனது உடலுறுப்புகளை தானமாக அளிக்க அவனது பெற்றோர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அமீரகத்தில் 2 சிறுவர்களும் சவூதி அரேபியாவில் 1 குழந்தையும் உயிர் பிழைத்திருக்கிறது.

மனதை சிதறடிக்கும் சூழ்நிலையிலும் பிற குழந்தைகளின் உயிரை முக்கியமாகக் கருதிய விவன் விஜயனின் பெற்றோருக்கு துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” மனிதாபிமானத்தின் உச்சத்தை இன்று நான் கண்டுகொண்டேன். அமீரகம் மற்றும் சவுதியில் உயிருக்குப் போராடிய சிறுவர்களின் உயிரைக் காக்க தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்த விவன் விஜயனின் பெற்றோருக்கு நன்றி. இறந்த குழந்தைக்கு எல்லாம் வல்ல இறைவனின் கருணை கிடைக்கட்டும். உயிர்பிழைத்த சிறுவர்கள் உடல்நலம் மேம்பட வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sheikh-hamdan-expo-2020-dubai-site
1 Share
Share via
Copy link