UAE Tamil Web

ஸ்கூலுக்குள் சர்ப்ரைஸாக நுழைந்த துபாய் இளவரசரின் கார் – திகைத்துப்போன குழந்தைகள்..!

hamdan-

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று அல் பர்ஷாவில் உள்ள துபாய் ஸ்கூலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.

குழந்தைகளின் கல்வி முறையில் புதுமையைப் புகுத்துவது பற்றி துபாய் ஆட்சியாளர் கல்வியதிகாரிகளிடம் பேசினார். அதேபோல குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட ஹம்தான், கல்வியறிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதுபற்றிப் பேசிய ஹம்தான்,”துபாய் ஸ்கூலை நேற்று நான் பார்வையிட்டேன். அங்கு கற்றல் முறைமைகள் குறித்து என்னிடம் விளக்கப்பட்டது. நம்முடைய ஞானம் மிக்க ஆட்சியாளரின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் இப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கலாச்சாரம், புராதானம் ஆகியவற்றை காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தத் தெரிந்த கண்டுபிடிப்பாளர்கள், புதிய தலைமுறை சிந்தனையாளர்களை இப்பள்ளி உருவாக்குகிறது” என்றார்.

hamdan-
0 Shares
Share via
Copy link