UAE Tamil Web

துபாய் இளவரசருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக அரசு அறிவிப்பு – வாழ்த்துகளால் நிரம்பி வழியும் சமூக வலைத்தளங்கள்..!

sheikh-hamdan

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் – ஷேக்கா ஷேக்கா பின்ட் சயீத் தம்பதிக்கு நேற்று இரவு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரில் ஒன்று ஆண் மற்றும் மற்றொன்று பெண் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் நீல மற்றும் பிங் நிற கால்களை கொண்ட புகைப்படத்தினை இளவரசர் பதிவிட்டுள்ளார். இதே புகைப்படத்தை அவரது சகோதரி மரியம் அவர்களும் பதிவிட்டுள்ளார்.

na22-MAY-sheikh-hamdan-twins

ஆண் குழந்தைக்கு ரஷீத் எனவும் பெண் குழந்தைக்கு ஷேக்கா எனவும் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இளவரசர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.