UAE Tamil Web

துபாய் இளவரசரின் காரில் கூடு கட்டிய பறவை – காரை யாரும் தொடக்கூடாது என துபாய் இளவரசர் உத்தரவு..!

sheikh-hamdan,-dubai,-uae,-viral-video

துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்களுடைய மெர்சீடிஸ் எஸ்யூவி (Mercedes SUV) காரின் விண்ட்ஷீல்ட்-ற்கு கீழே பறவை ஒன்று கூடுகட்டியிருக்கிறது.

முட்டைகளுடன் தனது கூட்டில் அமர்ந்திருக்கும் பறவையைப் பாதுகாக்க சில காலத்திற்கு காரை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார் துபாய் இளவரசர். யாரும் அந்தப் பறவைக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக அதனைச்சுற்றி சிவப்பு டேப் ஒன்றும் சுற்றப்பட்டிருக்கிறது.

தனது காரையும், அதிலுள்ள பறவைக் கூட்டையும் துபாய் இளவரசர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.