துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சாகசப் பிரியர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் துபாய் இளவரசருக்கு குழந்தைகள் என்றாலும் கொள்ளைப் பிரியம். தான் செல்லும் இடங்களில் எல்லாம் குழந்தைகளுடன் விளையாடுவதும் அவர்களுடன் நேரம் செலவிடுவதையும் தவறாமல் செய்துவிடுவார்.
இன்னிலையில் துபாய் எக்ஸ்போவிற்கு துபாய் இளவரசர் செல்கையில் அங்கே அங்கே ஏராளமான குழந்தைகள் இருப்பதைப் பார்த்ததும் குஷியான இளவரசர் குழந்தைகளிடம் சென்று ஜாலியாகப் பேசியிருக்கிறார்.
அப்போது தங்களுடைய எக்ஸ்போ பாஸ்போர்ட்டை மாணவக் குழந்தைகள் ஆர்வத்துடன் இளவரசரிடத்தில் காட்டியிருக்கின்றனர். அவரும் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாங்கிப் பார்த்திருக்கிறார்.
