அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அமீரக விண்வெளி முகமையின் புதிய தலைமை இயக்குனராக சலீம் புட்டி சலீம் அல் குபைசி -யை நியமித்து அரசானை வெளியிட்டிருக்கிறார்.
சலீம், கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டமும் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ்-ல் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொது மற்றும் தனியார் துறைகளில் ராணுவ விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த சலீம், அமீரகத்தின் விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வார் என நம்பப்படுகிறது.
இதற்காக, சர்வதேச அளவில் புதிய ஒப்பந்தங்களை சலீம் மேற்கொள்ள இருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
