அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று புதிய அரசானை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் என்னும் புதிய துறையை உருவாக்க இருக்கிறது அமீரக அரசு.
அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம், பெடரல் சுங்க ஆணையம் மற்றும் துறைமுகங்கள், எல்லைகள் மற்றும் இலவச மண்டல பாதுகாப்புக்கான பொது ஆணையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இப்புதிய ஆணையமானது உருவாக்கப்பட்டுள்ளது.
