ஓமான் ஆட்சியாளர் சுல்தான் கபூஸின் இறுதி சடங்கு.! அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்க ஷேக் கலீஃபா உத்தரவு.!

Shaikh_Khalifa_bin_Zayed_Al_Nahyan1

1970-லிருந்து 2020 வரை ஓமான் நாட்டை ஆட்சி செய்து, மத்திய கிழக்கு மற்றும் அரபு உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஆட்சியாளர் என்ற புகழ் பெற்ற, ஓமானின் மறைந்த சுல்தான் கபூஸிற்கு இறுதி பிராத்தனை செய்ய அமீரகத்தின் ஜனாதிபதி உயர்திரு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இன்று (January 11 2020) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நாடு முழுவதும் அனைத்து மசூதிகளிலும் அவருக்காக பிராத்தனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று, சனிக்கிழமை தொடங்கி, மூன்று நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடி நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து தூதரகங்கள் மற்றும் தூதரக பணிகளிலும் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

sulthan qaboos

 

Loading...