UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா : 885 சிறைக்கைதிகளுக்கு விடுதலை அளித்த அமீரக ஜனாதிபதி..!

Sheikh Khalifa bin Zayed Al Nahyan

அமீரகத்தின் தலைவரான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khalifa bin Zayed Al Nahyan) ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு அமீரகத்தில் பல்வேறு குற்றங்களினால் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 855 கைதிகளுக்கு விடுதலையளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த கைதிகள் செலுத்தவேண்டிய பணத்திற்கு தானே பொறுப்பு ஏற்பதாக அமீரக தலைவர் உறுதியளித்துள்ளார்.

அமீரகத்தின் சகிப்புத்தன்மை, மன்னித்தல் போன்ற முன்னெடுப்புகளின் வழியாக இந்த கைதிகள் தங்களுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும், அவர்களது குடும்பம் மற்றும் சமூகத்துடன் நன்முறையில் ஒன்றி வாழ்ந்திடவும் வழிசெய்யும் வகையில் இந்த கருணை அடிப்படையிலான முடிவை அமீரகத்தின் தலைவர் எடுத்துள்ளார்.

கைதாகி சிறைப்பட்டவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் எதிர்கால வாழ்வினை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் இத்தகைய பொது மன்னிப்பு நடவடிக்கைகளை அமீரக தலைவர் மேற்கொண்டுவருகிறார். இந்த நடவடிக்கையின் மூலமாக சரியான பாதையில் எதிர்காலம் நோக்கி இந்த மன்னிக்கப்பட்ட கைதிகள் தங்களது குடும்பத்தோடு பயணிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

Sheikh Khalifa bin Zayed Al Nahyan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap