UAE Tamil Web

70 ஆண்டுகால துபாயின் வளர்ச்சியை நிமிடங்களில் விவரிக்கும் வீடியோவை வெளியிட்ட துபாயின் துணை ஆட்சியாளர்..!

video

துபாயின் துணை ஆட்சியாளரும் நிதியமைச்சருமான மக்தூம் பின் முகமது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

துபாயின் அசாதாரண வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தட்கோ குழுமத்தின் தலைவர் அகமது பகிர் மற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மக்தூம் பின் முகமது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்பதிவில் வீடியோ ஒன்றினையும் அவர் இணைத்துள்ளார். அதில் 1947 ஆம் ஆண்டுமுதல் துபாயின் வளர்ச்சியில் தட்கோ செலுத்திய பங்கு குறித்து விளக்கப்பட்டுள்ளது. சுமார் 70 ஆண்டுகால வரலாற்றினை கண்முன் நிறுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

video
11 Shares
Share via
Copy link