UAE Tamil Web

சவுதி இளவரசருடன் தொலைபேசியில் உரையாடிய அபுதாபி இளவரசர்!

அமீரகம் – சவுதி அரேபியா இடையிலான உறவை மேம்படுத்தவும் இருநாட்டு வளர்ச்சி குறித்தும் அபுதாபி இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதி பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களிடம் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருநாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. கடந்த ஜுலை மாதம் ஷேக் முகமது அவர்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது தொலைபேசி வாயிலாக சவுதி இளவரசரிடம் பேசியது குறித்து ட்வீட் செய்துள்ளார். இருநாட்டு உறவு குறித்து எனது சகோதரரிடம் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

0 Shares
Share via
Copy link