எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியவர் முகமது ஹுசைன் தன்தாவி (Mohamed Hussein Tantawi). பின்னாளில் எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்து பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு கண்ட ஹுசைன் தனது 85 வயதில் இன்று காலமானார்.
இதனையடுத்து அபுதாபி பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஹுசைன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இளவரசர்,” எகிப்தின் ஃபீல்டு மார்ஷல் முகமது ஹுசைன் தன்தாவி மறைவினால் தவிக்கும் அந்நாட்டு பிரதமர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி அவர்களுக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எகிப்தின் நலனுக்காக பாதுகாப்பு அமைச்சராக அவர் மேற்கொண்ட பணிகளை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sincere condolences to President Abdel Fattah El-Sisi & the Egyptian people on the passing of Field Marshal Mohamed Hussein Tantawi. History will recall the Defence Minister’s instrumental role in ensuring the stability of Egypt & its institutions. May he rest in peace.
— محمد بن زايد (@MohamedBinZayed) September 25, 2021
