UAE Tamil Web

இந்த கிறிஸ்துமஸ் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும் – கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்த அபுதாபி இளவரசர்..!

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இளவரசர்,” கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பண்டிகை உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link