UAE Tamil Web

மக்களோடு மக்களாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அபுதாபியின் பட்டத்து இளவரசர்!

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக ஷார்ஜாவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டது அல் சுஹுப் ரெஸ்ட் ஹவுஸ். இதனை ஷார்ஜா ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அவர்கள் திறந்து வைத்தார். கோர் ஃபக்கானின் மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோர் ஃபக்கான் நகரத்தில் இருந்து 30 நிமிட பயணத் தொலைவிலும் ஷார்ஜாவின் மத்திய பகுதியில் இருந்து 90 நிமிட பயணத் தொலைவிலும் இந்த புதிய சுற்றுலா தளம் அமையப்பெற்றுள்ளது. இந்த நிலையில் அல் சுஹுப் ரெஸ்ட் ஹவுசிற்கு அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் திடீரென வருகை தந்தார். இதனால் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

Image

புதிய சுற்றுலா தளத்தை கண்டு களித்த பட்டத்து இளவரசர் பின்பு அங்குள்ள உணவகத்தில் சாதரணமாக அமர்ந்து உணவு உண்டார். பட்டத்து இளவரசரின் வருகையால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தனது திடீர் விசிட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக பல புதிய திட்டங்களை கொண்டு வரும் ஷார்ஜா ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அவர்களை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1 Share
Share via
Copy link