அபுதாபி இளவரசர் 11 மில்லியன் திரகம் நன்கொடையாக வழங்கினார்.!

Sheikh Mohamed donates Dh11 million to hospital damaged in terror attack

அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் அல் நஹ்யான் தீவிரவாத தாக்குதலில் சேதமடைந்த மருத்துவமனைக்கு 11 மில்லியன் திரகம் நன்கொடையாக வழங்கினார்.

கெய்ரோவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சேதமடைந்தது. அதனை சீரமைப்பதற்காக அபுதாபியின் இளவரசரும் மற்றும் துபாய் ஆயுதப்படையின் துணைத் தளபதியான சேக் முகமது பின் அல் நஹ்யான் 11 மில்லியன் திரகம் நிதி வழங்கியுள்ளார்.

எகிப்துகான ஐக்கிய அமீரக தூதர் ஜுமா முபாரக் அல் ஜுனைபி கூறுகையில், அபுதாபி இளவரசர் சேக்முகமது எகிப்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளார். தீவிரவாதத்திற்கு ஐக்கிய அமீரகம் ஓருபோதும் ஆதரவு அளிக்காது எனவும், இது உலகை அச்சுருத்தும் செயல் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஐக்கிய அமீரக அரசு எப்போதும் எகிப்திற்கு முழூ ஆதரவு அளிக்கும் எனவும், இந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

இந்த பயங்கரவாத செயல் ஓரு பொழுதும் எகிப்து மக்களின் மனதை பலவீனப்படுத்தாது எனவும், தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அரபுநாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Loading...