UAE Tamil Web

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரில் சந்தித்த அபுதாபி இளவரசர்!

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அவரை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் விமான நிலையத்திற்கே நேரடியாகச் சென்று வரவேற்பு அளித்தார். தொடர்ந்து இருவரும் அமீரக – பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான நட்புறவு குறித்து பேசிக்கொண்டனர். சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போரிஸ் ஜான்சனின் தாயார் மறைவுக்கு அபுதாபி இளவரசர் இரங்கல் தெரிவித்து ஆறுதலாக பேசினார். அதேபோன்று போரிஸ் ஜான்சனும் ஆப்கன் விவகாரத்தில் ஆர்வத்துடன் உதவி புரிந்ததற்காக அபுதாபி இளவசருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அமீரகம் – பிரிட்டன் இடையிலான வளர்ச்சிக்கு இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

0 Shares
Share via
Copy link