விழா ஒன்றில் தாம் கை கொடுக்க தவறிய சிறுமிக்கு நேரில் சென்று ஆச்சரியத்தை தந்த அபுதாபி பட்டத்து இளவரசர்..!

Sheikh Mohamed surprises Emirati girl on UAE National Day

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் குழந்தைகளிடம் சிறப்பு அன்பும், பாசமும் அதிகம் கொண்டவர் என்பதை இந்த பதிவு பறைசாற்றுகிறது.

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்திருந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துலூசிஸு வரவேற்பு நிகழ்ச்சியில், ஷேக் முகமது அவர்களுக்கு, ஆயிஷா முகமது முஷைத் அல் மஸ்ரூயி என்ற ஒரு எமிராட்டி சிறுமி கைகொடுக்க வரிசையில் நின்றார். ஆனால், அவர் கவனக்குறைவாக அந்த பெண்ணை மட்டும் புறக்கணித்து கடந்து சென்றுவிட்டார்.

இது பற்றி ட்விட்டரில் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் பகிர்ந்த ஒரு காணொளியில், ஷேக் முகமது அவர்கள் வரிசையில் நின்ற அனைத்து குழந்தைகளையும் வாழ்த்துவதையும், கடைசியாக நின்ற சிறுமியை வாழ்த்தாமல் கடந்து செல்வதையும், அந்த சிறுமி கையை அவரிடம் நீட்டியபடி ஏமாற்றத்தில் நிற்பதையும் அந்த காணொளியில் காணலாம்.

ஆனால், இப்படி ஒரு ஏமாற்றம் ஆயிஷாவுக்கு மறக்கமுடியாத மிக பெரிய தருணமாக மாறியது. ஆம், அபுதாபி பட்டத்து இளவரசர் அந்த சிறுமியை நேரில் சென்று பார்வையிட்டு மிக பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த சிறுமியுடன் அவரது பொன்னான நேரத்தை செலவிட்டார்.

மேலும், பகிரப்பட்ட அந்த அழகிய தருணத்தின் தொடர்ச்சியான புகைப்படங்களில், அவர் ஆயிஷாவைச் சந்தித்து, சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் காட்சிகள், சிறுமியின் கை மற்றும் நெற்றியில் அவர் அன்போடு முத்தமிடும் காட்சிகள் அனைவரையும் மகிழ்ச்சியிலும், பிரம்மிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

Loading...