UAE Tamil Web

“உங்களுடைய உழைப்பு மற்றும் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” – அபுதாபி இளவரசரின் உத்வேகம் அளிக்கும் ட்வீட்..!

sheikh zayed

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தவாரம் பட்டம்பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டியுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்,” உங்களுடைய கடின உழைப்பு, திறமை மற்றும் அறிவின் மீது எனக்கு அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது. இது அமீரகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு வித்திடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் பெற்றோரைப் பாராட்டிய இளவரசர்,” இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த அருமையான வெற்றியை மாணவர்கள் ருசிக்க காரணமாக இருந்த அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சில நாட்களுக்கு முன்பு அதிக மதிப்பெண் பெற்ற 7 மாணவர்களைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றினைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கத்திற்கு மாறான இந்த கல்வியாண்டில் இத்தகைய தேர்ச்சி விகிதத்தை அளித்த கல்வி நிறுவனங்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும்,” கடவுளின் அருளால் சிறப்பான எதிர்காலம் அமைய இருக்கிறது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அமீரக கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2020-21 கல்வியாண்டில் 28,220 பேர் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியதாகவும் அதில் 91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆதரிக்கும் நோக்கில் அவர்களுக்கு அமீரகத்தின் 10 வருடங்களுக்கான கோல்டன் விசா வழங்க அமீரக அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

sheikh zayed
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap