UAE Tamil Web

“கொரோனாவில் இருந்து மீண்டு வாருங்கள் நண்பரே” – பிரான்ஸ் அதிபருக்காக அபுதாபி இளவரசர் வெளியிட்ட ட்வீட்..!

EmmanuelMacron SheikhMohammed

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்-க்கு கொரோனா பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரான்ஸ் அதிபர் விரைவில் நலமடைய பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -

ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில்,” நண்பர் இம்மானுவேல் மேக்ரோன் கொரோனாவில் இருந்து மீண்டு வர வாழ்த்துகிறேன். அவர் விரைவாக உடல்நலம் பெறுவார் என நம்புகிறேன். பிரான்ஸ் மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.