ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் அங்கே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக ஏராளமான அப்பாவி மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். உணவுக்குக்கூட கஷ்டப்படும் நிலையில் நிர்கதியான மக்களுக்கு அமீரகம் தொடர்ந்து பல்வேறு வகையில் உதவிவருகிறது.
ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்காக ஹியூமனேட்டரியன் சிட்டியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஹியூமனேட்டரியன் சிட்டியில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
Under the directives of @HHShkMohd, @MBRHCharity to organize an air bridge to carry 120 tonnes of food and humanitarian aid to the people of Afghanistan. The first flight took off from #Dubai today.
— Dubai Media Office (@DXBMediaOffice) September 9, 2021
இந்நிலையில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் ஆணைக்கிணங்க உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் இன்று ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
முகமது பின் ரஷீத் மனிதாபிமான மற்றும் தொண்டு அமைப்பு இந்த உணவு மற்றும் மருத்துவ உதவிப் பொருட்களை ஏற்பாடு செய்தது. துபாயில் இருந்து கிளம்பிய அமீரக விமானத்தில் இந்த 120 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.