UAE Tamil Web

தனி விமானத்தில் ஈராக் சென்றடைந்தார் துபாய் ஆட்சியாளர் : விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற ஈராக் பிரதமர்..!

sheikh mohammed 2

மத்திய கிழக்கில் நிலவிவரும் அரசியல் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் துணையோடு ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இன்று ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய கிழக்கின் ஆட்சியாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இதில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள பாக்தாத் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈராக்கின் பிரதமர் முஸ்தபா அல் காதிமி விமான நிலையத்திற்கே சென்று துபாய் ஆட்சியாளரை வரவேற்றார்.

இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” உலகத்தின் தலைநகரமாக விளங்கக்கூடிய பாக்தாத்திற்கு வந்திருக்கிறேன். அமைதியும் ஞானமும் செழித்த நகரம்.. கவிஞர்கள், பண்டிதர்கள், எழுத்தாளுமைகள் என புகழ்பெற்ற நகரம்.. டைக்ரீஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளால் நாகரீகமடைந்த சிறந்த நகரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

sheikh mohammed 2
3 Shares
Share via
Copy link