UAE Tamil Web

அல் நஹ்யான் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட துபாய் ஆட்சியாளர்..!

Sheikh-Mohammed-attends-wedding-reception_1756b599c7e_large

அல் நஹ்யான் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் காணொளிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்,” அல் நஹ்யான் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்துகொண்டேன். ஷேக் தஹ்நூன் பின் சயீத் (Sheikh Tahnoun bin Zayed) மற்றும் ஷேக் சுல்தான் பின் கலிஃபா (Sheikh Sultan bin Khalifa) ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அவர்களையும் அமீரக மக்களையும் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி ஆசிர்வதிப்பார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் துணைத் தலைமைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” இந்த சவாலான சூழ்நிலையில் அமீரகத்தினை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும். சமூக நிகழ்ச்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கொரோனாவுக்கு எதிரான அமீரகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும்,” ஷேக் முகமது பின் சுல்தான் பின் கலீஃபா (Sheikh Mohammed bin Sultan bin Khalifa) மற்றும் ஷேக்கா பாத்திமா பின்ட் தஹ்நூன் பின் சயீத் (Sheikha Fatima bint Tahnoun bin Zayed) அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காணொளிக் காட்சி மூலமாக மணமக்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். எல்லா வளங்களோடும் மட்டற்ற மகிழ்ச்சியுடனும் வாழ அவர்களை வாழ்த்தினேன்” என பட்டத்து இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sheikh-Mohammed-attends-wedding-reception_1756b599c7e_large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap