UAE Tamil Web

அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு ஏழைகளுக்கான உணவு பிரச்சாரத்தை துவங்கும் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்

sheikh Mohammed

அமீரகத்தில் புனித ரமலான் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் நிலையில், உலக முழுவதும் இருக்கும் உள்ள ஏழைகளுக்கு ஒரு பில்லியன் உணவுகளை வழங்க அமீரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து அமீரகத்தின் துணைத் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, “ரமலான் மாதம் தொடக்கத்தில் இந்த பிரச்சாரம் துவங்கும் என்றும், ஒரு பில்லியன் உணவை வழங்குவதற்கான இலக்கை அடையும் வரை இந்த முயற்சி தொடரும்” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். எங்கள் மனிதாபிமானமும், மதமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூறுகிறது. பசித்தவர்களுக்கு உணவளிப்பதே சிறந்த தொண்டு. உலகில் மற்றவர்களைப் பற்றி நினைப்பவர்களே சிறந்தவர்கள் என்று ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வருடங்களில் அமீரகம் நடத்திய ரமலான் பிரச்சாரத்தில் மில்லியன் கணக்கான உணவுகள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap