கீழே விழுந்த சைக்கிள் ஓட்டுனருக்கு உதவிய துபாயின் ஆட்சியாளர்.!

Sheikh-Mohammed-profile-image--e1557831463467

ஷேக் முகமது பின் ரஷீத், கடந்த புதன்கிழமை (January 15 2020) சைக்கிள் பந்தய போட்டியின் போது ஒரு சைக்கிள் ஓட்டுனருக்கு உதவி செய்ய விரைந்தது தற்போது வைரலாகி வருகின்றது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், துபாயின் துணைத் தலைவர் மற்றும் ஆட்சியாளருமான ஷேக் முகமது, எமிராட்டி சைக்கிள் ஓட்டுநரான அல் வாத்பா அணியைச் சேர்ந்த அனன் அல் அம்ரி கீழே விழுந்தபின் அவருக்கு உதவுவதைக் காணலாம். இந்த சம்பவத்தில் அந்த சைக்கிள் ஓட்டுனருக்கு தன்னிடமிருந்த கைக்குட்டையை கொடுத்து உதவுவது ஷேக் முகமது அவர்களின் மனிதாபிமானத்தை மற்றும் அக்கறையையும் வெளிக்காட்டுகின்றது.

ஆர்வமுள்ள சைக்கிள் ஓட்டுநரான ஷேக் முகமது அவர்கள், பொது உறுப்பினரின் உதவிக்கு வருவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாலைவன மணலில் சிக்கிய ஒரு நண்பர்கள் குழுவிற்கு, காரை மேலே இழுக்க, ஷேக் முகமது அவர்கள் உதவியுள்ளார். அந்த குழுவில் ஒருவரான, ஹன்னா கரேன் அரோயோ என்பவர், “ஷேக் முகமது அவர்கள் தனது வெள்ளை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகனை நிறுத்தி, எங்களுக்கு உதவி செய்யும் வண்ணம் தனது வாகனத்துடன் எங்களது வாகனத்தை கட்டி, மேலே இழுக்க உதவியுள்ளார். அவருடைய இந்த உதவி செய்யும் மனப்பான்மையை பாராட்டி எங்களுது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று தனது நன்றியை ட்விட்டரில் வெளியிட்டார்.

இதுபோன்று, அவசரக்கட்டத்தில் இருக்கும் நபர்களை மீட்பது அரச குடும்பத்திற்கு ஒரு பாரம்பரியமாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. இதற்கு எடுத்துக்காட்டாக 2017 ஆம் ஆண்டில், துபாயின் மகுட இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது, பாலைவனத்தில் சிக்கித் தவித்த டிப்பர் லாரியின் ஓட்டுநருக்கு உதவி செய்துள்ளார். ஷேக் ஹம்தான், அவரது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63 வாகனத்துடன் இணைந்து, அந்த டிப்பர் லாரியை கயிற்றை கட்டி வெளியேற்றினர்.

Loading...