UAE Tamil Web

ஒற்றுமையே வலிமை – கால்பந்து அணியை நேரில் சந்தித்து பாராட்டிய துபாய் ஆட்சியாளர்!

2020-21ம் ஆண்டிற்கான அமீரக பிரெசிடன்சியல் கோப்பை, 50வது ஆண்டு கோப்பை, அமீரக சூப்பர் கோப்பை என 3 முக்கிய கால்பந்து போட்டிகள் அண்மையில் நடந்து முடிந்தன. இதில் சிறப்பாக விளையாடிய சஹாப் அல் அஹ்லி கால்பந்து அணி 3 கோப்பைகளை வென்று அசத்தியது. இந்த நிலையில் சஹாப் அல் அஹ்லி அணியை நேரில் வரவழைத்து அமீரக துணை அதிபரும் துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பாராட்டினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஒற்றுமையே வலிமை எனவும் புகழாரம் சூட்டினார். கால்பந்தில் 3 கோப்பைகளை மகுடம் சூட வீரர்களின் விடா முயற்சியும், கடின உழைப்புமே காரணம் என பாராட்டு தெரிவித்தார். விளையாட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்த ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், விளையாட்டை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை அமீரக அரசு செய்து வருவதாக சுட்டிக்காட்டினார். தொடர்ந்து சஹாப் அல் அஹ்லி அணியுடன் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

1 Share
Share via
Copy link