அபுதாபி நகர கட்டுமானத்தை திட்டமிட்ட டாக்டர். அப்துல் ரஹ்மான் மக்லோஃப் (Dr Abdulrahman Makhlouf) நேற்று தனது 98வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எகிப்தில் பிறந்த இவர் 1968 அக்டோபர் மாதத்தில் அபுதாபிக்கு முதன்முறையாக வந்திருக்கிறார். அதன்பிறகு தனது இறுதிமூச்சு வரையிலும் இங்கேயே அவர் வாழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் உருக்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
அபுதாபியின் முன்னாள் ஆட்சியாளரும் அமீரகத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் – மக்லோஃப் இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இரங்கல்
அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆய்தப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் மக்லோஃப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
رحم الله الدكتور عبد الرحمن مخلوف..عمل بصدق وإخلاص إلى جانب المغفور له الشيخ زايد..أحد الروًاد الذين أسهموا في رسم المخطط العمراني لإمارة أبوظبي .. خالص العزاء إلى أسرته الكريمة pic.twitter.com/1C4ggq1BaI
— محمد بن زايد (@MohamedBinZayed) December 14, 2021
இதுகுறித்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில்,” டாக்டர். அப்துல் ரஹ்மான் மக்லோஃப் அவர்களின் மீது இறைவனின் கருணை என்றும் இருக்கட்டும். ஷேக் சயீத் அவர்களுடன் இணைந்து நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்தவர் மக்லோஃப். அபுதாபி நகர கட்டுமானத்தின் திட்டங்களை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரான மக்லோஃப் அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.