UAE Tamil Web

“நீங்கள் இந்நாட்டின் மகள்கள்” : அமீரக மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

video

இன்று (ஆகஸ்டு 28) அமீரக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அமீரக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்ததை நினைவுகூர்ந்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அமீரக பெண்கள் அனைவரும் இந்நாட்டின் மகள்கள் என துபாய் ஆட்சியாளர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், அமீரக பெண்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்த ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் (Sheikha Fatima bint Mubarak) அவர்களையும் வாழ்த்துவதாக துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

video
1 Share
Share via
Copy link