35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

1.5 பில்லியன் திர்ஹம்சை போனஸாக வழங்கிய துபாய் ஆட்சியாளர்!

sheikh-mohammed,-dubai,-uae,-licence-plate

அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) கடந்த 10 வருடங்களில் துபாயைச் சேர்ந்த ஏமிராட்டி டாக்ஸி உரிமையாளர்களுக்கு 1.5 பில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமான தொகையை போனசாக அளித்திருப்பதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority) அறிவித்துள்ளது.

இதுகுறித்து துபாய் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குனரும், நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவருமான மாட்டார் முகமது அல் தயேர் (Mattar Mohammed Al Tayer) பேசுகையில்,” ஏமிராட்டி டாக்ஸி உரிமையாளர்களின் வளமான வாழ்விற்காகவும், அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சியை மலரச் செய்யவும் ஷேக் முகமது ஆண்டுதோறும்  போனஸ் வழங்கிவருகிறார்” என்றார்.

துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் உள்ள ஏமிராட்டி டாக்ஸி உரிமையாளர்களின் 2019 ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையான 51 மில்லியன் திர்ஹம்சை  ஈத் அல் பித்ர் பண்டிகையின் போது வழங்குமாறு உத்தரவிட்ட ஆட்சியாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அல் தயேர் தெரிவித்தார்.

ஆட்சியாளரின் இந்த தார்மீக நடவடிக்கையினால் 3,052 டாக்ஸி உரிமையாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற சில பதிவுகள்