உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 பெருநிகழ்வு அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துபாய் எக்ஸ்போ 2020 சிட்டிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்ட இளவரசர், எக்ஸ்போ சிட்டி முழுவதும் துபாயின் முக்கிய அதிகாரிகளுடன் சைக்கிள் பயணித்தார்.
.@HHShkMohd goes on a bike tour of @Expo2020Dubai, as the world eagerly awaits the launch of the mega-event next month. pic.twitter.com/lJjwPtHGgI
— Dubai Media Office (@DXBMediaOffice) September 12, 2021